Monday 17 April 2017

மின்னியலின் சில முக்கிய விதிகள்

                மின்சாரம் உருவாக உதவியாக இருக்கும் மின் ஆக்கி (ஜெனெரேட்டர்), மற்றும்  உருவாகிய மின்சாரத்தை பயன்படுத்தும் மின்னோடி (எலெக்ட்ரிக் மோட்டார் ) இவை இரண்டும் மின்னியலின் முக்கிய அங்கமாகும். இவை இரண்டும் இயங்குவதற்கு காந்த புலம் (magnetic field) மிக அவசியமாகும்.

ஃபாரடேவின் விதி(FARADAY'S LAW)
                           
                           ஃபாரடேவின்  தூண்டல் விதி(Faraday's law of induction) என்பது மின்காந்தவியலின் அடிப்படை விதியாகும். மின்மாற்றிகள்(Transformers), தூண்டிகள்(Inductors), மின் ஆக்கி(generator), மின்னோடி(Electric motor) போன்றவையின் அடிப்படை கொள்கையாக விளங்குவது இவ்விதியே .
                                      இவ்விதி கூறுவதாவது, ஒரு கம்பி சுருளினுடைய காந்த சூழலில் மாற்றம் ஏற்படுமாயின், அந்த சுருளில் மின்னழுத்தம் தூண்டப்படும்.
காந்த சூழல் மாற்றத்தின் கரணம் எதுவாயினும் அதனுள் மின்னழுத்தம் உருவாகும்.
காந்த சூழலை எப்படி மாற்ற முடியும்??
  •    காந்த சக்தியை மாற்றுவது மூலமாகவோ



  •     அல்லது காந்தத்தை சுருளை நோக்கியோ அல்லது விட்டு தூரமாக நகர்த்துவதன் மூலமாகவோ



  •     அல்லது சுருளை காந்த புலத்தை நோக்கியோ அல்லது தூரமாக நகர்த்துவதன் மூலமாகவோ

  •     அல்லது காந்த புலம் இருக்கும் இடத்தில சுருளை சுழற்றுவதன் மூலமாகவோ



  •    அல்லது சுருளை சுற்றி காந்தத்தை சுழற்றுவதன் மூலமாகவோ காந்த சூழலை மாற்ற முடியும்.



இதை பற்றி மேலும் காணொளி மூலம் புரிந்துக்கொள்ள பார்க்கவும் :  https://youtu.be/wCXCpc3BBcM



ஃபிளெமிங்கின் விதி(FLEMING'S RULE)

                 ஒரு சுருளோ அல்லது கடத்தியோ காந்த புலத்தில் உள்ளபோது, அந்த காந்த புலத்தின் திசை மற்றும் மின்சாரத்தின் திசை மற்றும் விசையின் திசைகள் எவ்வாறு இருக்கும் என்பதை சொல்வதே ஃபிளெமிங் விதியாகும். ஃபிளெமிங்கின் விதி இருவகைப் படடுத்தப்பட்டுள்ளது
                  1) ஃபிளெமிங்கின் இடது -கை விதி 
                  2) ஃபிளெமிங்கின் வலது -கை விதி 
 ஃபிளெமிங்கின் இடது -கை விதி :
               ஃபிளெமிங்கின் இடது -கை விதி மின்னோடிகளுக்கு(motor) பயன்படுத்தப்படுகிறது. இது கூறுவதாவது, ஒரு மின்சாரம் பாய்ந்துக்கொண்டிருக்கும் கடத்தியை காந்த புலம் உள்ள இடத்தில வைத்தால், அந்த கடத்தியானது மின்சாரத்தின் திசை மற்றும் காந்த புலத்தின் திசை இரண்டிற்கும் செங்குத்தான திசையில் விசைக்கு உள்ளாகும்.
             ஃபிளெமிங்கின் இடது -கை விதிப்படி கட்டை விறல், ஆள்காட்டி விறல், நடு விறல் இவை மூன்றும் ஒவ்வொன்றிற்கும் செங்குத்தாக விரிக்கப்பட்டிருக்கும் நிலையில், கட்டை விறல் விசையின் திசையையும் ஆள்காட்டி விறல் காந்த புலத்தின் திசையையும் நடு விறல் மின்சாரத்தின் திசையையும் குறிக்கும்.


ஃபிளெமிங்கின் வலது -கை விதி :
               ஃபிளெமிங்கின் வலது -கை விதி மின் ஆக்கிகளுக்கு(generator)
பயன்படுத்தப்படுகிறது. இது கூறுவதாவது, காந்த புலம் உள்ள இடத்தில ஒரு கடத்தியை வலுக்கட்டாயமாக நகர்த்தினாள் அதனினுள் ஒரு மின்னழுத்தம் தூண்டப்படும்(induce). அந்த கடத்திக்கு அடைத்த பாதை(close path) அமைத்தால், தூண்டப்பட்ட மின்னழுத்தமானது மின்சாரம் பாய்வதற்கு வழிவகுக்கும் .
              ஃபிளெமிங்கின் வலது -கை விதிப்படி கட்டை விறல், ஆள்காட்டி விறல், நடு விறல் இவை மூன்றும் ஒவ்வொன்றிற்கும் செங்குத்தாக விரிக்கப்பட்டிருக்கும் நிலையில், கட்டை விறல் கடத்தியின் நகர்வு திசையையும் ஆள்காட்டி விறல் காந்த புலத்தின் திசையையும் நடு விறல் தூண்டப்பட்ட மின்சாரத்தின் திசையையும் குறிக்கும். 



ஓமின் விதி( ohm's law)

                       இவ்விதி கூறுவது, ஒரு கடத்தியில்  பாயும் மின்சாரமானது அந்த கடத்தியில் செலுத்திய மின் அழுத்ததிற்கு நேர் விகிதச்சரதிலும் ரேசிச்டன்ஸ்-ற்கு தலைகீழ் விகிதசரதிலும் இருக்கும் என்பதாகும்.


முக்கிய குறிப்புகள் :

  •               ஒரு கடத்தியில் அணுக்கள் நகர்வதையே நாம் மின்சாரம் என்கிறோம்.
  •                நகரும் அணுக்களின் அளவை பொறுத்தே  மின்சாரத்தின் அளவும் இருக்கிறது.
  •                கடத்தியில் செலுத்தும் மின் அழுத்தத்தின் அளவை பொறுத்தே நகரும் அணுக்களின் அளவும் இருக்கும்.
  •                ஒவ்வொரு கடதியிலும் அணுக்களின் நகர்வை எதிர்க்கும் வகையில் ரெசிஸ்டன்ஸ் எனப்படும் எதிர்ப்பும் இருக்கும். கடத்தியின் வகை, நீளம், தடிமானம் போன்ற பல்வேறு காரணங்களால் ரெசிஸ்டன்ஸின் அளவு மாறுபடும்.
  •                  ஒரு கடத்தியில் மின்சாரம் பாய்ந்தால் அதனை சுற்றி காந்த புலம் உருவாகும். ஆதலால் காந்த புலத்தை உருவாக்க காந்தம் அவசியம் என்பதில்லை, சாதாரண கடத்தியில் மின்சாரம் செலுத்தினாலே போதும்.
  •          
         குறியீடு          அலகு
    மின் அழுத்தம்           V வோல்டேஜ்(V)
    மின்சாரம்             I ஆம்பியர்(A)
    ரெசிஸ்டன்ஸ்             R ஓம்(Ω)
                          

No comments:

Post a Comment

Basic Electrical Measurement Devices

Voltmeter             Voltmeter is an instrument used to measure the potential difference between two points. Voltmeter available in both ...