Thursday 3 January 2019

மின்னியலின் அடிப்படை அளவீட்டு சாதனங்கள்

வோல்ட்மீட்டர்
                         வோல்ட்மீட்டர் எனும் கருவி, இரண்டு புள்ளியில் உள்ள மின்னழுத்தத்தை அளவிட பயன்படுகிறது. வோல்ட்மீட்டர் ஆனது அனலாக் மற்றும் டிஜிட்டல் என இருவகையிலும் உள்ளது. அனலாக் வோல்ட்மீட்டர் இல் மாறுதிசை மின்னழுத்தம் மற்றும் நேர்திசை மின்னழுத்தம் அளவிட தனித்தனி கருவிகள் உள்ளது. டிஜிட்டல் வோல்ட்மீட்டர் இல் முறையை மாற்றுவதின் மூலம் அளவிட முடியும். வோல்ட்மீட்டர் எப்பொழுதும் அளவிடவேண்டிய கூறு இன் பக்கவாட்டிலேயே இணைக்க வேண்டும். வோல்ட்மீட்டர் இன் மின் எதிர்ப்பானது கண்டிப்பாக மிக அதிகமாக இருக்க வேண்டும். அளவிட்ட மின்னழுத்தத்தின் SI அலகு Volt(V).


அம்மீட்டர்
               அம்மீட்டர் எனும் கருவி, அதன் வழியாக பாயும் மின்னோட்டத்தை அளவிட பயன்படுகிறது. இதுவும் அனலாக், டிஜிட்டல் என இருவகையிலும் உள்ளது. அம்மீட்டர் , அளவிட வேண்டிய சுற்றின் நேர்கோட்டில் இணக்க வேண்டும். அம்மீட்டர் இன் மின் எதிர்ப்பானது கண்டிப்பாக மிக குறைவாக இருக்க வேண்டும். அளவிட்ட மின்சாரத்தின் SI அலகு Ampere(A).


ஓம் மீட்டர்
                ஓம் மீட்டர் எனும் கருவி, கூறு இன் மின் எதிர்ப்பை அளவிட பயன்படுகிறது. இதுவும் அனலாக், டிஜிட்டல் என இருவகையிலும் உள்ளது. ஓம் மீட்டர் , அளவிட வேண்டிய கூறு இன் பக்கவாட்டிலேயே இணைக்க வேண்டும். அளவிட்ட மின் எதிர்ப்பு இன் SI அலகு Ohm(Ω)


மல்டி மீட்டர்
                  பெயரிலேய உள்ளதுபோல் மல்டி மீட்டர்  பல்வேறு மின்னியல் அளவீடுகளுக்கு பயன்படுத்தலாம். சாதாரண முல்டி மீட்டர் வைத்து மின்னழுத்தம், மின்சாரம், மின் எதிர்ப்பு மற்றும் தொடர்ச்சி ஆகியவற்றை பல்வேறு வரம்புகளில் அளவிடலாம்.

No comments:

Post a Comment

Basic Electrical Measurement Devices

Voltmeter             Voltmeter is an instrument used to measure the potential difference between two points. Voltmeter available in both ...